இணைய வழிக் கல்வியும் மாணவர்களும்
சமகாலத்தில் கல்வியானது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இன்றியமையாத விடயமாகும். இக்காலகட்டத்தில் நாம் யாராலும் மறுக்க முடியாத ஓர் சூழ்நிலைக்கு மாணவர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, தற்பொழுது உலகளாவிய ரீதியில் மிக வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று பல உயிர்களைக் காவு கொண்டது மட்டுமன்றி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் கேள்விக் குறியாக்கி விட்டது. இதனால் மாணவர்கள் தற்போது அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது, ஆகவே, இந்த சீரற்ற சூழ்நிலையிலும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நவீன யுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழினுட்ப முறைiயான இணையவழிக் கல்வி முறையினைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்;. இந்த இணைய வழிக் கல்வி முறையே தற்கால நிலைமையில் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு சாத்தியமாக காணப்படுகிறது. இதனால், தற்போது இணையவழிக் கல்வி உலகில் பரவலாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது, இந்த இணையவழிக் கல்வி முறையானது, மாணவர்களின் கல்வித் தேவையை ஈடுகட்டக் கூடியதாக காணப்படினும், அதனுள்ளும் ஒரு…